ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த சேவைக் கட்டணம்; ஈரான் அமைச்சர் அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.
சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி போக்குவரத்துச் சுங்கக் கட்டணம் (Transit Tolls) விதிக்க முடியாது, ஆனால் சேவைக் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் இதுகுறித்த விதிமுறைகள் ஓமனுடன் இணைந்து வெளியிடப்படும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

அதேவேளை மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தனது 'X' சமூக ஊடக கணக்கில் பதிவொன்றையிட்டு பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தாம் இருதரப்புடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.