சீனாவில் கடுமையான சனத்தொகை வீழ்ச்சி!
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தற்போது கடுமையான சனத்தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகிறதாக கூறப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அந்த நாட்டின் மக்கள் தொகை தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, 2025 இறுதியில் சீனாவின் மொத்த மக்கள் தொகை 140.5 கோடி ஆகும். அதேவேளை இது 2024 ஆம் ஆண்டை விட 33.9 இலட்சம் குறைவாகும்.
விலைவாசி உயர்வு, பொருளாதார அழுத்தம் மற்றும் வேலைப்பளு காரணமாக இளைஞர்கள் திருமணம் மற்றும் குழந்தை பெறுவதில் ஆர்வம் காட்டாததே இதற்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சனத்தொகையை அதிகரிக்க சீன அரசாங்கம் பல்வேறு அலுகைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.