பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் CEO-க்கு 31 கோடி கொடுத்து பணிநீக்கம் செய்த நிறுவனம்!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நிசான் மோட்டார் கம்பெனியின் முன்னாள் சி.இ.ஓ. அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற அந்நிறுவனம் அவருக்கு 3.7 மில்லியன் டொலர்கள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு (2023) ஜூன் மாத வாக்கில் அஷ்வானி குப்தா நிசான் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
நிசான் நிறுவனத்தின் எதிர்காலமாக கருதப்பட்ட நிலையில், அதன் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து வெளியேறிய சம்பவம் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த ஆண்டு (2023) நிசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அஷ்வானி குப்தா செயல்பட்டு வந்தார்.
தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அஷ்வானி குப்தா விலகுவதாக நிசான் நிறுவனம் அறிவித்ததை அடுத்து, அவர் அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.