கனடாவில் 300 இளைஞர்களை தகாத முறைக்கு உட்படுத்திய நீச்சல் பயிற்றுவிப்பாளர்
கனடாவில் நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஓருவர் சுமார் 300 இளைஞர்களை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோஷியாவின் வாடர்வில்லில் உள்ள இளைஞர் மையத்தில் இந்த பாலியல் வன்முறை குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
75 வயதான டொனால்ட் டக்ளஸ் வில்லியம்ஸ் என்ற முன்னாள் நீச்சல் பயிற்சிவிப்பாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1988 முதல் 2017 வரை மையத்தில் பணியாற்றிய வில்லியம்ஸ், 1989 முதல் 2015 வரையிலான காலத்தில் 12 முதல் 18 வயதுக்குள் உள்ள 300க்கும் மேற்பட்ட இளைஞர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை (காயம் ஏற்படுத்திய), பாலியல் சுரண்டல், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வில்லியம்ஸ் நீதிமன்ற நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதுடன் செப்டம்பர் 26 அன்று கென்ட்வில் மாகாண நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 450க்கும் மேற்பட்டவர்களை விசாரித்து, 9,800 ஆவணங்களை ஆய்வு செய்து வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.