அமெரிக்கா விடுதியில் இந்திய தம்பதி பாலியல் தொழில்; சினிமா பாணியில் கைது
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் நடத்தியதாக இந்திய வம்சாவளி தம்பதியினர் உட்பட ஐந்து பேரை எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோஷா சர்மா மற்றும் தருண் சர்மா எனும் இந்திய தம்பதியினர், தங்களுக்கு சொந்தமான 'ரெட் கார்பெட் இன்' விடுதியின் மூன்றாவது தளத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சினிமா பாணியில் கைது
விடுதியின் உரிமையாளர்களான இவர்கள், விடுதிக்கு வரும் சாதாரண விருந்தினர்களை கீழ் தளங்களில் தங்க வைத்துவிட்டு, மூன்றாவது தளத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாலியல் தொழிலை அனுமதித்துள்ளனர்.
இதற்காக சட்டவிரோத கும்பலிடம் இருந்து கமிஷன் தொகையை பெற்று வந்ததோடு, காவல்துறை சோதனைக்கு வரும்போது குற்றவாளிகளை எச்சரித்து தப்ப வைப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
எஃப்பிஐ மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்திய ரகசிய வேட்டையில் அதிகாரிகள் வாடிக்கையாளர்களாகவும் இடைத்தரகர்களாகவும் நடித்து கைது செய்துள்ளனர். கைதான ஐந்து பேர் மீதும் போதைப்பொருள் விநியோகச் சதி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்திய தம்ப்பதி உள்ளிட்ட கைதானசந்தேக நபர்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது