ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது
ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13-ம் தேதி அங்குள்ள கடைக்கு அவர் சென்றார்.
வெளியே வந்தபோது வாசலில் இருந்த குப்பைத் தொட்டி வெடித்துச் சிதறியதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ரஷ்ய போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது ரஷ்யாவின் சோச்சி பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி மார்கரிட்டா ராய்ட் (32), ஒரு காரில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்திருப்பது தெரியவந்தது.
கைதான பாலியல் தொழிலாளி உக்ரைன் ராணுவத்தின் உளவாளியாக செயல்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டனாக இருந்த ராபர்ட் ஷகீவ், ரஷ்ய ஆதரவாளராக மாறிய பின்னர் ரஷ்ய கடற்படையின் மூத்த தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.