இளம் பெண் பாலியல் வன்கொடுமை; மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு
இங்கிலாந்தின் Kent பகுதியில் உள்ள Gravesend நகரில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்கள் உடபட ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கென்ட் காவல்துறையினருக்கு நேற்றுமுன்தினம்தகவல் கிடைத்ததின்படி, ஒரு இளம் பெண் தனியார் வீட்டில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆண்களும் மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மூன்று சிறுவர்களில் இருவர் சிறுவர் தடுப்பு மையத்தில்
33 வயதான ஐஒனுட் டோப்ரே (Ionut Dobre ) மீது பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேபோல், 16 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 15 வயதுடைய ஒரு சிறுவனும் அதே குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும், 46 வயதான பெனோனே இனோஃப்டே (Benone Inofte) மீது பாலியல் வன்கொடுமைக்கு உதவியதாக (aiding and abetting) குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஐந்து பேரும் கென்ட் பகுதியில் உள்ள மெட்வே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து வழக்கு தென் கிழக்கு லண்டனில் உள்ள வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரியவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று சிறுவர்களில் இருவர் சிறுவர் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் உள்ளூர் அதிகாரிகளின் பராமரிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.