கனடிய சுகாதார திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை
கனடிய சுகாதார திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதியளிக்கப்படாத பாலியல் ஊக்க மருந்து வகைப் பயன்பாடு குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரிய சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடிய பாலியல் ஊக்க மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோர்த் யோர்க், ஸ்காப்ரோ, ரொறன்ரோ போன்ற இடங்களில் இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகளை சுகாதார திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
“Rhino 7 Platinum 10000,” “Titanium 12K” and “Black Panther#1.” போன்ற பாலியல் ஊக்க மருந்து வகைகள் மிக ஆபத்தானவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர் குருதியழுத்தம், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வகை மருந்துகளை பயன்படுத்துவது மிக ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை மருந்துகளை பயன்படுத்துவதனை உடன் நிறுத்துமாறும் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் மருந்துகளை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.