இலங்கையில் சடுதியாக அதிகரித்த அடுப்பின் விலைகள்; மக்கள் திண்டாட்டம்
இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பின் விலைகள் சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு தொடர்பில் தற்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் மாற்று நடவடிக்கையாக சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பினை கொள்வனவு செய்கின்றனர்.
இதன் காரணமாக மண்ணெண்ணெய் - மின்சார அடுப்பின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அதன்படி 2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றின் விலையானது தற்போது 8,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், புறக்கோட்டை மற்றும் புறநகர்பகுதிகளில் மண்ணெண்ணெய் அடுப்பு இல்லாமையினால் நுகர்வோரும், வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.