பிரான்ஸில் ஆயுததாரியால் 3 பொலிஸ் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸில் ஆயுததாரி ஒருவரை கைது செய்ய முற்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நண்பகல் Ris-Orangis (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. 12.40 மணி அளவில் நபர் ஒருவர் வீதியில் சென்ற கனரக வாகனம் ஒன்றின் சாரதியை கத்தி மூலம் மிரட்டியுள்ளார்.
அதையடுத்து உடனடியாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைக்கப்பட்டனர். இச் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த நபரை கைது செய்ய முற்பட்டனர்.
அதையடுத்து, திடீரென ஆக்ரோஷமடைந்த குறித்த ஆயுததாரி பொலிஸ் அதிகாரிகளை தாக்க முற்பட்டார். கத்தி மூலம் அதிகாரிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பின்னர் ஒருவழியாக ஆயுததாரி கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் மனநலம் பாதிக்கபப்ட்டவர் என அறிய முடிகிறது.
மேலும் காயமடைந்த மூன்று அதிகாரிகளும் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.