லண்டனில் சுட்டுக்கொல்லப்பட்டவரின் வீட்டில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டேவிட் ஜொய்ஸ் என்னும் 38 வயது நபரை, லண்டன் பொலிசார் சுட்டுக் கொன்றவரின் வீட்டில் இருந்து ஆபத்தான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மில்டன் கீன்ஸ் ரயில் நிலையத்திற்கு முன்னால், அவர் ஒரு கை துப்பாக்கியோடு நின்றிருந்தார். இதனை பார்த்த பயணிகளில் ஒருவர் பொலிசாருக்கு அறிவிக்க. உடனே ஆயுதப் பொலிசார் அங்கே குவிந்தார்கள்.
பயங்கரமான ஆயுதங்கள்
டேவிட் ஜொஸ்ஸை சரணடையச் செல்லி, பொலிசார் பல முறை அறிவித்தும் அவர் அதனைச் செய்யவில்லை. மாறாக பொலிசாரை நோக்கிச் சுட முனைந்தவேளை பொலிசார் சுட்டதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இன் நிலையில் அவரது வீட்டை நேற்றைய தினம் சோதனை செய்த பொலிசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. படு பயங்கரமான வில் அம்பு, நீளமான சாமுராய் வாள், நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கைத் துப்பாக்கி 9MM என்று பல பயங்கரமான ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட டேவிட் ஜொய்ஸ் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.