மத்திய ஐரோப்பாவில் பதறவைத்த சம்பவம்; 10 பேரை கொன்ற மாணவனால் அதிர்ச்சி
மத்திய ஐரோப்பாவின் பிராக்கில் (Prague) உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செக் குடியரசில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு இது எனவும் கூறப்படுகிறது. சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைக் கட்டிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
தீவிரவாத நோக்கத்துடன் தொடர்புடையது இல்லை
மாணவன் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இந்த சம்பவம் எந்த தீவிரவாத நோக்கத்துடனும் அமைப்புடனும் தொடர்புடையது இல்லை என செக் உள்துறை அமைச்சர் விட் ரகுசான் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸார் ஆய்வு நடத்திவருவதாகவும், கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு , தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிசூடு நடத்திய மாணவரும் பலி
அதேவேளை துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார். அவர் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பொலிஸார் சுட்டுக்கொன்றனரா? என்பது தெரியவில்லை.
பொலிஸ் விசாரணையில் அவரது பெயர் டேவிட் கோசாக் (வயது 24) என்பதும், அந்த பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது போலீசில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை.
சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் சட்டப்பூர்வமாக பல துப்பாக்கிகள் வைத்து இருந்துடன் நிறைய வெடிமருந்துகளும் வைத்து இருந்தார்.
துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பராக் நகருக்கு மேற்கே சொந்த ஊரான ஹோக் டவுனில் தனது தந்தையை கொன்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.