பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொடர்பில் வெளியான அறிக்கையால் அதிர்ச்சி!
32 வகையான உடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகளே காரணம் என பிரிட்டனின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்ல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அடிமயாகி விட்டனர் என்றே சொல்லலாம். அந்தவகையில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குடிமக்களின் உணவு வகைகளில் சுமார் 50 சதவீதம் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் பயன்பாட்டில் உள்ளன.
அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவு
இத்தகைய உணவு வகைகளினால் உடல்நலனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பல லட்சம் மக்களை உள்ளடக்கி செய்யப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (British Medical Journal) எனும் மருத்துவ பதிப்பகத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் ,
அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், 32 வகையான தீவிர உடல்நல கேடுகள் உருவாக வாய்ப்புள்ளது.
புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள், மனநல பாதிப்பு, சுவாச மண்டல குறைபாடுகள், இருதய மற்றும் ரத்தக் குழாய் குறைபாடுகள், நாளமில்லா சுரப்பி கோளாறுகள், குடல் மற்றும் இரைப்பை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவை வழிவகுக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது
உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு இத்தகைய அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பேக்கரி உணவு வகைகள், குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படு தயாரிக்கப்படும் உணவுகள், வறுவல் வகைகள், புரதச் சத்து "பார்" மற்றும் பவுடர்கள், உடனடியாக சாப்பிடும் (ready-to-eat) உணவுகள், ஐஸ்கிரீம்கள் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் அடங்கும்.
இத்தகைய உணவு பொருட்களை தயாரிக்கும் பொழுதோ அல்லது இவற்றில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருள்களை தயாரிக்கும் பொழுதோ, அவற்றில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டு, அடர்தன்மைக்காகவும், சுவைக்காகவும், அழகான தோற்றத்திற்காகவும் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்டு, கெட்டு போகாமல் இருக்க "பிரிசர்வெட்டிவ்" (preservative) எனும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு, அத்துடன் அளவிற்கு அதிகமாக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்டவை சேர்த்து செயற்கையான முறையில் சிறு மற்றும் பெரும் உற்பத்திசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
இத்தகைய தயாரிப்புகள் உற்பத்திக்கூடங்களிலிருந்து கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் காலம், மக்களிடம் விற்பனை செய்யப்படும் வரையில் கடைகளில் உள்ள நாட்கள், பயன்படுத்தும் வரை வீடுகளில் ரெஃப்ரிஜிரேட்டர்களில் வைத்திருக்கும் காலம் ஆகியவை கடந்தும் சுவை, திடம், நிறம் கெடாமல் இருக்கும் வகையில் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மிக குறைவு என்பதால் மனிதர்களின் சிந்திக்கும் மற்றும் செயலாற்றும் திறனை இவை படிப்படியாக குறைத்து விடும் எனவும் அந்த ஆய்வறிக்கை மக்களை எச்சரிக்கிறது.