லண்டனில் கடத்தி கைவிடப்பட்ட 3 குழந்தைகள் ; குழந்தைகள் தொடர்பில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
லண்டனில் கடந்த 7 ஆண்டுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று குழந்தைகள் கைவிடப்பட்டன.
பெற்றோர் தேடப்பட்டுவந்த நிலையில் தற்போது அந்தக் குழந்தைகள் அனைத்தும் உடன்பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கிழக்கு லண்டனில் கடந்த ஏழு வருடங்களாக ஷாப்பிங் பேக்குகள் மற்றும் போர்வைகளால் சுற்றப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட மூன்று குழந்தைகளின் பெற்றோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
2024 ஜனவரி மாதம் குளிர்ந்த காலநிலையில் பூங்காவில் பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குழந்தைக்கு எல்சா (Elsa) என பெயர் வைக்கப்பட்டது.
இந்தக் குழந்தையின் பெற்றோர் தேடப்பட்டுவந்த நிலையில், எல்சா கண்டுபிடிக்கப்பட்ட அதே சுற்றுப்புற பகுதியில் 2017-ல் புதிதாக பிறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கைவிடப்பட்ட குழந்தையும் (Roman), 2019-இல் கைவிடப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையும் (Harry) எல்ஸாவின் உடன்பிறப்பு என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
லண்டனின் நியூஹாமில் மூன்று குழந்தைகளும் உயிருடன் காணப்பட்டன, மேலும் அவை விரைவாக பராமரிக்கப்பட்டன.
இது செப்டம்பர் 2017-இல் ஒரு சிறிய பூங்காவில் போர்வையில் போர்த்தப்பட்ட நிலையில் ஹாரி கண்டுபிடிக்கப்பட்டபோது, குழந்தையின் தாயை முன் வரும்படி பொலிஸார் முறையிட்டனர், ஆனால் அவர் வரவில்லை.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ரோமன் அருகிலுள்ள மற்றொரு பூங்காவில் ஒரு போர்வை மற்றும் ஒரு ஷாப்பிங் பையில் மூடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டான்.
அதனப்பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து குழந்தை எல்சா அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பது.
இதில் சந்தேகமடைந்த பொலிஸார் மூவருக்கும் சோதனை செய்தது பார்த்தனர்.
இந்நிலையில், டிஎன்ஏ பரிசோதனையில் மூன்று குழந்தைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.