கொவிஷுல்ட் தடுப்பூசி தொடர்பில் இங்கிலாந்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கொவிஷுல்ட் தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத் தாக்கல் ஒன்றில், ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது
இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2019 இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்கப்பட்டது.
இதற்கிடையில், அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதால் தனக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாக ஜேமி ஸ்காட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல் இழப்பீடு கோரி 51 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது.
.அரிதான சந்தர்ப்பங்களில், கொரோனா தடுப்பூசி இரத்தம் உறைதல் மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை (டிடிஎஸ்) ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது.