சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சுவிட்சர்லாந்தில் இளைஞர்களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்கொலை எண்ணங்கள் வாட்டுவதாகக் கூறி உதவி நாடும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சிறுவர் மற்றும் இளைஞர் ஆதரவு தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறுவர் மற்றும் இளைஞர் ஆதரவு தொண்டு நிறுவனமான Pro Juventute என்னும் அமைப்பு, கடந்த ஆண்டில் வாரம் ஒன்றிற்கு மூன்று பேர் தங்களை தற்கொலை எண்ணங்கள் வாட்டுவதாகக் கூறி உதவி கோரி அழைத்ததாகவும், இதுவே, 2019இல் வாரம் ஒன்றிற்கு ஒருவர் மட்டுமே உதவி கோரி அழைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
அதன்படி கொரோனா காலகட்டம், பருவநிலை, உக்ரைன் போர் மற்றும் தற்போதைய பொருளாதாரச் சூழல் ஆகியவற்றால் அதிகரித்துள்ள மன அழுத்தமே பிள்ளைகளுக்கு தற்கொலை எண்ணங்கள் உருவாகக் காரணம் என நம்பப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.