இந்திய நடிகரின் உணவகம் மீது துப்பாக்கிச் சூடு ; மீண்டும் மீண்டும் கொடூரம்
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
மீண்டும் துப்பாக்கிச் சூடு
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் இந்த ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குல்வீர் சித்து, கோல்டி தில்லோன் உள்ளிட்ட குற்றவாளி குழுக்க்கள் பொறுப்பேற்றுள்ளன. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.