வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு ; மூவர் பலி...தெறித்து ஓடிய மக்கள்
தாய்லந்து தலைநகர் பேங்காக்கின் Siam Paragon கடைத்தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் கடைத்தொகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டதாகத் தாய்லந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தில் கைதான சிறுவனுக்கு 14 என கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குறைந்தது மூவர் காயமுற்றதாகவும் அவசரகாலச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
คือเกิดไรขึ้นอะไร #พารากอน pic.twitter.com/lN15oxGa68
— D.weii_ (@Dweii_ii) October 3, 2023
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து மக்கள் கடைத்தொகுதியிலிருந்து தெறித்துஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.