நள்ளிரவில் நடுங்க வைத்த சம்பவம்: மூவர் கவலைக்கிடம், ஒருவர் பலி
ரொறன்ரோவில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் நால்வர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சம்பவயிடத்தில் இறந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் வென்டோம் பிளேஸ் மற்றும் கிரெனோபிள் டிரைவ் பகுதிக்கு நள்ளிரவு 12.45 மணிக்கு அவசர உதவிக்குழுவினருக்கு அழைப்பு சென்றுள்ளது.
துப்பாக்கி சூடு தொடர்பில் தகவல் அறிந்த அவசர உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் நால்வர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் காயம் காரணமாக சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பிலான அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் விசாரணை அதிகாரிகள் வென்டோம் பிளேஸ் மற்றும் கிரெனோபிள் டிரைவ் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே, சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் என ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கின்றனர்.