அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில் துப்பாக்கி சூடு ; 3 பேர் பலி
அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் நெவடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் உடற்பயிற்சி கூடம் ஒன்று செயல்படுகிறது.அங்கு வழக்கம்போல் பலர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் அத்துமீறி அங்கு நுழைந்தார். பின்னர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார்.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
அதற்குள் அங்கு விரைந்த போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.