அமெரிக்காவில் மாணவர்களைச் சுட்டுக் கொன்ற பின் தற்கொலை
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டக்ளஸ் கவுண்டி உயர்நிலைப் பள்ளியில், ஒரு மாணவன் தனது சக மாணவர் இருவரை சுட்டுக் கொன்ற பின் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை, வகுப்பறையில் இருந்த ஒரு மாணவன் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசனை
பின்னர், அந்த மாணவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டான்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்றும், பள்ளிக்கும், சமூகத்திற்கும் வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் டக்ளஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவத்தைக் நேரில் கண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கட்டுப்பாடு மற்றும் பள்ளி பாதுகாப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.