துருக்கியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!
துருக்கியின் மனிசா (Manisa) மாகாணத்தில் உள்ள தொழிற்கல்வி பாடசாலை ஒன்றுக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகாள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக 15 வயதுடைய சந்தேகநபரான மாணவன் ஒருவனை காவல்துறை கைது செய்துள்ளது.

மனிசா மாகாணத்தின் 'இன்சி உஸ்மேஸ்' (Inci Uzmez) தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப உயர்நிலைப் பாடசாலைக்கு இன்று காலை வெளியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், காயமடைந்த அனைவரும் மாணவர்களே என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் உரிமையாளரான சந்தேகநபரின் பாட்டன், மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதி அமைச்சர் அகின் குர்லெக் (Akın Gürlek) குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை துருக்கியில் இந்த ஆண்டில் துருக்கியில் இடம்பெற்ற மூன்றாவது பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.