அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு ; 4 பேரை சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்த நபர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மத்திய மன்ஹாட்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், காவல் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவமானது, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பார்க் அவென்யூவிலுள்ள வானளாவிய கட்டிடத்தின் வரவேற்பறையில், திங்கட்கிழமை மாலை 6:40 மணியளவில் இடம்பெற்றது.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயதான ஷேன் தமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரும் பின்னர் கட்டிடத்தின் 33வது மாடியில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
நியூயார்க் காவல்துறை வெளியிட்ட தகவலின் படி, ஷேன் தமுராவுக்கு கைத்துப்பாக்கிக்கான உரிமம் இருந்தது. மேலும், காலாவதியான தனியார் துப்பறிவாளர் உரிமமும் அவரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து அவருடைய தற்கொலைக் கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில், அவர் “க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி” (CTE) என்ற மூளை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 15 நிமிடங்கள் தொலைவில், ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப் மற்றும் அன்னா ஹாத்வே நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
🔥🚨HAPPENING NOW; A mass shooter described as ‘middle eastern man’ is reigning terror in NYC with a semiautomatic, there are multiple casualties reported including police officers. pic.twitter.com/1w1OgkEUj6
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) July 28, 2025