அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு; மேலும் மூவர் பலி!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாதத்தில் கலிபோர்னியாவில் நடந்த நான்காவது துப்பாக்கிச் சூடு இதுவாகும். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி க்ரெஸ்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு கலிபோர்னியா நடன அரங்கில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 9 பேர் காயமடைந்தனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவின் தெற்கில் உள்ள ஹாஃப் மூன் பேயில் உள்ள ஒரு காளான் பண்ணையில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் தனது சக ஊழியர்களில் ஏழு பேரைக் கொலைசெய்தனர்.
இந்த இரண்டு பயங்கரமான சம்பவங்களில் அரை தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கலிஃபோர்னியாவின் பெரிய ஆசிய அமெரிக்க சமூகத்திலிருந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மக்கள் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள போராடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.