பற்றியெரிந்த ஷொப்பிங் மால் ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
ஈராக்கில் நேற்றிரவு 5 மாடி கட்டிட ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக்கில் உள்ள வாசிட் மாகாணம் குட் நகரில் கடந்த வாரம் ஐந்து மாடி ஷாப்பிங் மால் திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் சிக்கிய 45 பேருக்கும் மேற்பட்டோரை அவர்கள் மீட்டனர். இருந்தபோதிலும் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயில் கருகிய 14 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கட்டிட உரிமையாளர், ஷாப்பிங் மால் உரிமையாளர் மீ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.