இலங்கை சந்தையில் விரைவில் இதற்கு தட்டுப்பாடு நிலவக் கூடும்!
இலங்கையில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக் கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை அந்த சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா (Buddhika De Silva) தெரிவித்துள்ளார்.
நாட்டில் எதிர்வரும் காலங்களில் குறைந்தளவிலான தேங்காய் உற்பத்தியே கிடைக்கப்பெறும்.
தொடர்ந்தும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில் அதற்கான தட்டுப்பாடு மேலும் தீவிரமடையக் கூடும்.
நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காயெண்னை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.