பேரி நகரில் துப்பாக்கிச் சூடு: தப்பியோடிய சந்தேகநபரை தீவிரமாகத் தேடும் பொலிஸார்!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பேரி நகரின் மத்திய பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய சந்தேகநபரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வியாழக்கிழமை அதிகாலை 6:00 மணியளவில், டண்லப் வீதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பொன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பேரி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இச்சம்பவத்தில் இதுவரை எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் பதிவாகவில்லை.

பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், குறித்த கட்டிடத்தில் வசிக்கும் பலர் தற்காலிகமாகத் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் நகரின் மத்திய பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.