திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்... பயணிகள் பலருக்கு நேர்ந்த நிலை!
சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் பலர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டி.ஆர்-100 என்ற விமானம் குவாங்சூ நகர் அருகே சென்றபோது பயங்கரமாக குலுங்கியது.
இதன்போது, பயணிகள் அருகில் உள்ள இருக்கை மீது மோதினர். இதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த விமானம் குவாங்சூ விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கிடையே மீட்பு குழுவினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர்.
அவர்கள் விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        