சிங்கப்பூரில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் ; திணறும் அரச நிறுவனங்கள்
சிங்கப்பூர் நாட்டில் ஒரு சக்திவாய்ந்த சைபர் தாக்குதலால் இடம்பெற்று்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சைபர் தாக்குதல் அரசு நிறுவனங்கள் உட்பட முக்கிய அமைப்புகளை குறிவைத்த நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கே.சண்முகம் இந்த சைபர் தாக்குதல் UNC 3886 என அடையாளம் காணப்பட்டதாக கூறினார்.
சிங்கப்பூரில் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் உள்ள அமைப்புகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலைவில் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.