அதிபர் புடினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சித் தலைவருக்கு நேர்ந்த நிலை
ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி(Alexei Navalny) க்கு மேலும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதிபர் புடினின்(Vladimir Putin) அரசை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி(Alexei Navalny) கடந்த 2020ஆம் ஆண்டு விஷத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.
ஜெர்மனியில் இருந்து ரஷ்யா வந்த நவால்னியை ரஷ்யக் போலீசார் பல்வேறு தேசவிரோத வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நவால்னி(Alexei Navalny) மீதான அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரஷ்ய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் 11ஆயிரத்து 500 டாலர் அபராதத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.