கனடாவின் ஓர் வீதிக்கு சூட்டப்பட உள்ள இந்தியரின் பெயர்!
கனடாவின் ஓர் வீதிக்கு இந்தியர் ஓருவரின் பெயர் சூட்டப்படவுள்ளது.
கனடாவின் பிரம்டனின் ஓர் வீதிக்கு இவ்வாறு இந்திய இசைக்கலைஞரின் பெயர் சூட்டுவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த, பிரபல ராப் இசைக் கலைஞர் சித்து மூஸ் வாலா என்பவரின் பெயரே இந்த வீதிக்கு சூட்டப்பட உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பொது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூஸ் வாலா கொல்லப்பட்டார்.
நகரசபையில் வீதியின் பெயருக்கு இசைக் கலைஞரின் பெயர் சூட்டுவது குறித்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க்பபடுகின்றது.
நகர சபையில் இந்த யோசனை ஏற்றுக் கொள்ளபப்பட்டால் விரைவில் பிரம்டன் நகரின் ஓர் வீதிக்கு இஞைக் கலைஞர் மூசாவின் பெயர் சூட்டப்பட உள்ளது.
இசைக் கலைஞர் மூஸா படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாக உள்ள நிலையில் வீதிக்கு பெயர் சூட்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.