கியுபெக்–ஒன்டாரியோ எல்லைப் பகுதியில் லேசான நிலநடுக்கம்
கியுபெக்–ஒன்டாரியோ எல்லைப் பகுதிக்கு அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.55 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.8 மெக்னிட்யூட் (MW) அளவிலானதாக காணப்பட்டது.
இதனால் எந்தவித சேதங்களும் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும், சேதம் ஏற்படும் வாய்ப்பும் இல்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியுபெக் மாகாணத்தின் பக்கிங்க்ஹாம், கெடினோ, ஒன்டாரியோ மாகாணத்தின் ஹாக்ஸ்பரி மற்றும் தலைநகர் ஒட்டாவா உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டிருக்கலாம்.
இந்தப் பகுதி கடந்த சில தசாப்தங்களில் பல நிலநடுக்கங்களை எதிர்கொண்டுள்ளது.
அவற்றில் சில, ரிக்டர் அளவுகோலில் 5.0-ஐ கடந்த வலிமையுடன் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிராந்தியத்தில் இதுவரை பதிவான மிகப் பெரிய நிலநடுக்கம், 1732 செப்டம்பர் 16 அன்று ஏற்பட்ட 5.8 மெக்னிட்யூட் நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.