புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக விமானம் விபத்து; விமானி உயிரிழப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள 'ஸ்பேஸ் கோஸ்ட் பிராந்திய விமான நிலையத்திற்கு' அருகில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று மின்சாரக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து திங்கட்கிழமை காலை புளோரிடா வின் டைட்டஸ்வில்லே பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் 'Mooney M20F' ரகத்தைச் சேர்ந்த 04 பேர் பயணிக்கக்கூடிய சிறிய ரகப் புரோப்பல்லர் விமானம் என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.

24 மணி நேரத்திற்குள், இரண்டாவது விமான விபத்து
வீதியில் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.விமானியின் அடையாளத்தை அதிகாரிகள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்து 05 பேர் பலியான சோகம் நடந்து 24 மணி நேரத்திற்குள், புளோரிடாவில் இரண்டாவது விமான விபத்தாக இது பதிவாகியுள்ளது.