கியூபெக்கில் விபத்துக்குள்ளான சிறிய விமானம்! விமானி வைத்தியசாலையில்
கியூபெக்கில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கியூபெக் நகரின் ஜேன் லிசாஜே சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தின் ஓடு தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
செஸ்னா 172 ரக சிறிய விமானமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் விமானி மட்டும் பயணம் செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த விமானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் தலைகீழாக கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விமான விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
பிரதான ஓடு தளத்தில் விமான விபத்து இடம்பெற்றதனால் சில விமானப் பயணங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.