அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் மோதி விபத்துக்குள்ளாகி விமானம் தீப்பிடித்து எரிந்ததால் விமானத்திலிருந்த ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விபத்துக்குள்ளான குடியிருப்பு பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொது மக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 40 தீயணைப்பு படையினர், விமானத்தின் தீயைக் கட்டுப்படுத்தியதுடன், அப்பகுதியில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.