கத்திமுனையில் விமானத்தை கடத்திய அமெரிக்கவின் முன்னாள் இராணுவீரர் ; சுட்டுக்கொன்ற பயணி
மத்திய அமெரிக்க நாடான பெலிசேயில் சிறிய விமானமொன்றை நபர் பயணிகள் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார் எனவும் பின்னர் பயணிகள் ஒருவரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோசோவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் செல்லும் சான்பெட்ரோவிற்கு 14 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடுவானில் கடத்தப்பட்ட விமானம்
விமானம் நடுவானில் கடத்தப்பட்டதாகவும்,இந்த விமானம் இரண்டு மணிநேரமாக பல திசைகளில் சுற்றிவந்ததாகவும் இந்த விமானத்தைபொலிஸ் விமானம் பின்தொடர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் கரையோரநகரமான லேடிவிலேயில் விமானம் தரையிறங்கியுள்ளது.விமானம் நடுவானில் கடத்தப்பட்ட தருணம் முதல் பெலிசேயில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விபரிக்க முடியாத அழுத்தத்தை எதிர்கொண்ட எங்களின் விமானிகள் அசாதாரண தைரியம் அமைதியுடன் செயற்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்காக வழிநடத்தினார்கள் என விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பயணிகள் இருவரும் விமானி ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பயங்கரமானது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தை கடத்தியவர் முன்னாள் அமெரிக்க இராணுவீரர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதங்களை எடுத்துச்செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த பயணியொருவர் விமானத்தை கடத்தியவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு அவரை கொலை செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது