நயாகராவில் நாய்கள் மீது துப்பாக்கிச் சூடு
கனடாவின் நயாகரா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அட்டகாசமாக ஓடிய மூன்று பெரிய நாய்களில் ஒன்று, பொலிஸ் அதிகாரியைக் தாக்க முனைந்ததால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது.
தோரால்ட் ஸ்டோன் மற்றும் கலார் சாலைகள் அருகே மாலை 5.30 மணியளவில், மூன்று பெரிய நாய்கள் சாலையில் வாகனங்களுக்கு இடையே ஓடி, பாதசாரிகளைத் துரத்தி வருவதாக தகவல் கிடைத்ததால் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவருக்கு நாய் கடித்து சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் மற்றும் வாகன சாரதிகள் நாய்களை கட்டுப்படுத்த முயன்றாலும் அது வெற்றியளிக்கவில்லை.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரு நாய் மிகவும் ஆக்ரோசமாக பொலிஸ் அதிகாரி ஒருவரை நோக்கி பாய்ந்து, அவரை சாலைக்குள் தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிர் பாதுகாப்பிற்காக அந்த அதிகாரி தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி நாயை சுட்டுள்ளார்.
அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்ற இரண்டு நாய்களையும் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நயாகரா விலங்கு பாதுகாப்பு அமைப்பு (SPCA) மற்றும் ஹ்யூமேன் சொசைட்டி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
பிடிக்கப்பட்ட இரண்டு நாய்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது இதுவரை தெளிவாக இல்லை.
இந்த நாய்கள் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தன, அல்லது அவை எந்த இனத்தை சேர்ந்தவை என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.