கியூபெக்கில் பனிப்பொழிவினால் ஏற்பட்ட பாதிப்பு
கனடாவின் கியூபெக் மாகாணம் முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக, மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்றிமீற்றர் வரையிலும் பனி படிந்துள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன.

ஈரமான பனியும் மரங்களில் இன்னும் உதிராத இலைகளும் சேர்ந்து மரக்கிளைகள் முறிவதற்குக் காரணமாகியுள்ளது என ஹைட்ரோ கியூபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல கிளைகள் மின்கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்குக் கொண்டுவர பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்தடை மற்றும் மோசமான வானிலை காரணமாக மத்திய கியூபெக், மொன்றியல் மற்றும் தெற்கு கரை பகுதிகளில் உள்ள பல பள்ளி வாரியங்கள் இன்று வகுப்புகளை ரத்து செய்துள்ளன.