வீட்டிற்குள் சோதனை என கூறி தங்க நகைகளை திருடிய சிப்பாய்கள்
போதைப்பொருள் சோதனை நடவடிக்கை என கூறி வீடொன்றுக்குள் நுழைந்து தங்க நகைகள் திருடிய விமானப் படை சிப்பாய்கள் இருவர் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலாதுஓயா விமானப் படை முகாமில் கடமையாற்றும் இரு சிப்பாய்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விமானப் படை சிப்பாய்கள் கைது
பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்களான விமானப் படை சிப்பாய்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விமானப் படை சிப்பாய்கள் இருவரும் குறித்த வீட்டிலிருந்து 469,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் ரத்தொட்ட மற்றும் கொப்பேகடுவே ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 31 மற்றும் 32 வயதுடைய விமானப் படை சிப்பாய்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.