பிரபல பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்

India Death
By Vironika Sep 11, 2026 08:34 AM GMT
Report

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார்.

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பிரபல பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார் | Solomon Pappayya Has Passed Away

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.

அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார்.

இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

அத்துடன், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

'பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார்.

மேலும், 'அவர்கள் கண்ட ராமன்”, 'இவர்கள் நோக்கில் கம்பன்”, 'கம்பவனத்தில் ஓர் உலா”, 'கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார்.

 தமிழ்த் துறைக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான மத்திய அரசின் 'பத்மஸ்ரீ” விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'முத்தமிழ் பேரறிஞர்” விருதும், 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US