மெக்ஸிக்கோவில் சிக்கியுள்ள கனேடியர்கள் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர்
மெக்ஸிக்கோவில் சிக்கியுள்ள கனேடியர்களில் சிலர் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளாக மெக்ஸிக்கோ சென்ற கனேடியர்கள் அங்கு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் காரணமாக, நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
வன்முறைகளினால் முக்கியமான விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிக்கோவின் வடகிழக்கு பகுதியில் இரண்டு விமான நிலையங்கள் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது.
கடல் கரையோர ஹோட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம், நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
வன்முறைகள் இடம்பெறும் பகுதிகளில் தங்கியிருக்கும் கனேடியர்கள் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் புகுமாறு கனேடிய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தயிருந்தது.
தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு தொடர்ந்தும் பயண ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிக்கோவில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்ததனைத் தொடர்ந்து வன்முறைகள் அந்நாட்டில் வெடிக்கத் தொடங்கியுள்ளன.