பிரான்ஸில் பயங்கரம்; பெற்றோரை கொன்றுவிட்டு மகன் தற்கொலை!
பிரான்ஸில் வீடொன்றில் இருந்து மூவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சின் வடகிழக்கு எல்லை மாவட்டமான Moselle இல் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Retonfey எனும் சிறு கிராமத்தில் வசிக்கும் 73 வயதுடைய தாய் மற்றும் அதே வயதுடைய தந்தையை அவர்களது மகன் சுட்டுக்கொன்றுள்ளார்.
பிரான்ஸில் பொலிஸில் பணிபுரியும் 46 வயதுடைய மகன், இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முதியவர்களை பராமரிக்கும் தாதி ஒருவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சடலங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அதேவேளை சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண் நீண்டகாலமாக நோயுடன் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.