திடீர் என உயிரிழந்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ மகன்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளாவின் (Satya Nadella) 26 வயதான மகன் ஜெயின் நாதெள்ளா (Zain Nadella) திடீரென மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைச் சேர்ந்த சத்ய நாதெள்ளா (Satya Nadella) இருந்து வருகிறார்.
இவருக்கு ஜெயின் நாதெள்ளா (Zain Nadella) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயின் நாதெள்ளா (Zain Nadella) நேற்று காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்ய நாதெல்லா (Satya Nadella) மகன் ஜெயின் நாதெள்ளா (Zain Nadella) பிறவியிலேயே தசை இயக்கம், தசைநார் பெருமூளை வாதம் ஆகிய குறைகளுடன் பிறந்தவர் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ஜெயின் நாதெள்ளா (Zain Nadella) மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,
‘நமது சிஇஓ சத்ய நாதெள்ளா மகன் ஜெயின் நாதெள்ளா மறைவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என கூறப்பட்டுள்ளது.