அச்சுறுத்தும் Omicron! தென் ஆப்பிரிக்காவில் பரவுவது நான்காவது அலையா? பீதியில் மக்கள்
Omicron மாறுபட்டால் தற்போது தென் அமெரிக்காவில் நான்காவது அலை பரவி வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா மாறுபட்டால் புதிதாக உருவாகிய Omicron வைரஸ் முதல் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அங்கு பரவி வரும் Omicron மாறுபாடு நான்காவது அலையாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் இதுவரை 7 மாகாணங்களில் Omicron கால்பதித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே இந்த கொடிய நோயில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். இதனால் தென் ஆப்பிரிக்கர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை சமாளிக்க முடியும் என்று மோது மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கூறியுள்ளார். கொரோனா மாறுபட்டால் உருவாகிய புதிய வகை Omicron இதுவரை சுமார் 38 நாடுகளுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது.