பறந்து வந்த குப்பை பலூனால் விமான நிலையத்தை மூடிய தென் கொரியா
பறந்து வந்த வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியா விமான நிலையத்தில் விழுந்ததனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
தென் கொரியாவிற்குள் குப்பை
இந்நிலையில் சமீப காலமாக பலூன்கள் மூலம் தென் கொரியாவிற்குள் குப்பைகளை வீசுகிறது. சிகரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய ஏராளமான பலூன்களை தென்கொரியாவிற்குள் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், வட கொரியாவில் இருந்து இன்று மீண்டும் குப்பை பலூன்கள் தென் கொரியா நோக்கி அனுப்பப்பட்டன. இந்த பலூன்களில் ஒரு பலூன், தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் அருகே விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் விழுந்தது.
மேலும் பல பலூன்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே பறந்துகொண்டிருந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது.
அதோடு ஓடுபாதையில் எந்த விமானமும் தரையிறக்க அனுமதிக்கப்படவில்லை. எந்த விமானமும் புறப்பட்டுச் செல்லவில்லை. மூன்று மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சரியானதும், விமான சேவை தொடங்கியதாக தென்கொரிய தகவ்ல்கள் கூஉறுகின்றன.
அதேவேளை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வட கொரியாவில் இருந்து வந்த சுமார் 100 பலூன்கள் தென் கொரியாவுக்குள் விழுந்ததாக அந்நாடு ராணுவம் கூறியுள்ளது.