100 ஆண்டுகளின் பின் கொட்டிய பனியால் திணறும் தென்கொரியா; விமானங்கள் ரத்து!
தென்கொரியாவின் சியோல் 100 ஆண்டுகளுக்கு பிறகு பனியால் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவுக்கு முந்தைய நாள், சியோலில் 16.5 சென்டிமீட்டர் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், 1907 ஆம் ஆண்டில் இவ்வளவு பெரிய அளவிலான பனிப்பொழிவு ஏற்பட்டதாக கொரிய வானிலை நிர்வாகம் கூறியுள்ளது.
விமானங்கள் ரத்து
அதேவேளை முன்னதாக, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவு நவம்பர் 28, 1972 அன்று பதிவானது, அப்போது பனிப்பொழிவின் அளவு 12.4 செ.மீ., என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடும் பனிப்பொழிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தெற்கு சியோலில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கிழக்கு கங்காங் மாநிலத்தில் வோன்ஜு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் 53 வாகனங்கள் சிக்கிக் கொண்டதாகவும், அங்கு ஏற்பட்ட விபத்துகளில் 11 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை சியோலின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக அதிகாரிகள் 156 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.