வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு மகன் இருக்கிறாரா? உடைந்த ரகசியம்!

North Korea Kim Jong Un South Korea
By Sulokshi Sep 11, 2026 08:43 AM GMT
Report

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்கத் தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் , நாட்டின் அடுத்த அதிபராக கிம்மின் மகள் ‘கிம் ஜூ ஏ’ (Kim Ju Ae) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே மிகவும் உறுதியாக உள்ளதாகப் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு மகன் இருக்கிறாரா? உடைந்த ரகசியம்! | South Korea Trying To Learn Kim Jong Un Has A Son

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலை

வடகொரியாவில் தந்தை வழி சமூக அமைப்பும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலையும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இருப்பினும், இதுவரை கிம்மின் மூத்த மகன் அல்லது மூன்றாவது குழந்தை குறித்து எவ்வித உறுதியான வரலாற்றுச் சான்றுகளோ அல்லது பொதுவெளி நகர்வுகளோ வெளியாகவில்லை.

மாறாக, கிம் ஜோங் உன்னின் சுமார் 13 வயது நிரம்பிய மகள் ‘கிம் ஜூ ஏ’, சமீபகாலமாக நாட்டின் முக்கிய இராணுவக் கூட்டுப் பயிற்சிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அரசாங்க நிகழ்வுகளில் அதிபருக்கு நிகராகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

வடகொரிய அரசு ஊடகங்களும் அவரை “மிகவும் மதிப்பிற்குரிய வழிகாட்டி” (Respected Guide) என வாரிசுக்கான சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிடத் தொடங்கியுள்ளன.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் உளவுத்துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தின்படி, கிம் ஜூ ஏ வாரிசுப் பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்துவிட்டார் என்றும், வடகொரியாவின் நான்காம் தலைமுறை அதிகாரத்தை அவரே கைப்பற்றுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வடகொரியாவில் மூத்த ஆண் வாரிசு உள்ளாரா என்ற கேள்விகள் நிலவியபோதிலும், இராணுவப் படைகளின் ஆதரவு மற்றும் அதிகாரப்பூர்வ நகர்வுகள் அனைத்தும் கிம் ஜூ ஏ-வை நோக்கியே நகர்வதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US