கைதான தென் கொரிய ஜனாதிபதி விடுதலை
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யூன் சுக் இயோல்
தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவ அவசர நிலையை அறிவித்தார்.
இராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் குறித்த உத்தரவு கைவிடப்பட்டது. இதனிடையே, இராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
தென் கொரிய வரலாற்றிலேயே ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதோடு அவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி நீக்கம் செய்வதுடன், அடுத்த இரு மாதங்களுக்குள் தேர்தலும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.