கனடா கடற்பகுதியில் துயரம்... மீன்பிடி கப்பல் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட பலர்

death boat fishing spanish
By Arbin Feb 15, 2022 10:43 PM GMT
Report

கிழக்கு கனடாவின் கடற்பகுதியில் ஸ்பெயின் நாட்டு மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 7 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை கனடா மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்கியவர்களில் 7 பேர்களின் சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும், மூவரை உயிருடன் மீட்டுள்ளதாக கனேடிய மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நியூஃபவுண்ட்லாந்திலிருந்து கிழக்கே 250 கடல் மைல் தொலைவில் கப்பல் மூழ்கியதாகவும், அப்போது அதில் 24 மீனவர்கள் இருந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கடினமான வானிலைக்கு மத்தியில் எஞ்சிய 14 மீனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான கப்பலில் 16 ஸ்பெயின் நாட்டவர்கள், ஐந்து பெருவியர்கள் மற்றும் மூன்று கானா நாட்டவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டுள்ளனர் என ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

விபத்தில் சிக்குவதற்கு முன்னர் குறித்த கப்பலில் இருந்து உதவி கேட்டு கடலோரக காவல் படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 5 மணி நேரத்திற்கு பின்னர் இன்னொரு ஸ்பெயின் நாட்டு மீன்பிடி கப்பல் அப்பகுதி வழியாக கடந்து சென்றதாகவும், அவர்களே உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்த மூவரை மீட்டதாக, 7 சடலங்களையும் கரையில் சேர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள் மூவரையும் கனேடிய கடலோர காவல் படை ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், கனேடிய நிர்வாகத்தால் ஹெலிகொப்டர், ராணுவ விமானம், கடலோர காவல் படைக்கான கப்பல் மற்றும் பல என்ணிக்கையிலான படகுகள் என அனைத்தும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US