ரொறன்ரோவில் கடுமையான காற்று தொடர்பில் எச்சரிக்கை!
கனடாவின் ரொறன்ரோவில் கடுமையான காற:று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் நாளைய தினமும் கடுமையான காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் இவ்வாறு காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பலத்த காற்று காரணமாக சில வேளைகளில் மின்சாரம் தடைப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மரங்கள் முறிந்து விழக்கூடும் எனவும், கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், வார இறுதியில் ஓரளவு வெப்பநிலையுடனான காலநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.